2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் - எந்த மாநிலத்திற்கு முதலிடம்?

2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் - எந்த மாநிலத்திற்கு முதலிடம்?
2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் - எந்த மாநிலத்திற்கு முதலிடம்?

தமிழகத்தில் அதிக அளவு 2,000 ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

2018 ஆம் ஆண்டில் நாட்டில் மொத்தமாக 54 ஆயிரத்து 776 போலி இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. அதில், 12 ஆயிரத்து 560 போலி இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் தமிழ்நாட்டில் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. அடுத்ததாக மேற்கு வங்கத்தில் 9 ஆயிரத்து 615 போலி இரண்டாயிரம் ரூபாய்‌ தாள்களும்,‌ கர்நாடகாவில் 6 ஆயிரத்து 750 ரூபாய் போலி தாள்களும், டெல்லியில் 6 ஆயிரத்து 457 போலி ரூபாய் தாள்களும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. மிசோரமில் 3 ஆயிரத்து 494 போலி இரண்டாயிரம் ரூபாய் தாள்களும், குஜராத்தில் 2 ஆயிரத்து 722 ரூபாய் போலி தாள்களும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

அதேபோல, அனைத்து ரூபாய் தாள்களில் போலி நோட்டுகள் அதிகம் பறிமுதல் செய்யப்பட்டதில் டெல்லி முதலிடத்திலும், அடுத்தடுத்த இடங்களில் குஜராத் மற்றும் தமிழ்நாடும் இடம்பெற்றுள்ளன. அனைத்து மதிப்பிலான பணங்களில் டெல்லியில் 67 ஆயிரத்து 324 போலி ரூபாய் தாள்களும், குஜராத்தில் 28 ஆயிரத்து 855 போலி ரூபாய் தாள்களும், தமிழ்நாட்டில் 24 ஆ‌யிரத்து 715 போலி ரூபாய் தாள்களும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

அதேபோல, மகாராஷ்டிராவில் 20 ஆயிரத்து 802 போலி ரூபாய் நோட்டுகளும், உத்தரப் பிரதேசத்தில் 19 ஆயிரத்து 109 ரூபாய் நோட்டுகளும் ஆந்திராவில் 17 ஆயிரத்து 493 ரூபாய் நோட்டுகளும் போலியானவை எனக் ‌கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்‌றன

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com