"விவசாயிகள் தற்கொலை குறித்த தரவுகளை மாநில அரசுகள் வழங்குவதில்லை" - மத்திய அரசு

"விவசாயிகள் தற்கொலை குறித்த தரவுகளை மாநில அரசுகள் வழங்குவதில்லை" - மத்திய அரசு

"விவசாயிகள் தற்கொலை குறித்த தரவுகளை மாநில அரசுகள் வழங்குவதில்லை" - மத்திய அரசு
Published on

விவசாயிகள் தற்கொலை தொடர்பாக தரவுகள் இல்லை என மத்திய அரசு தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயிகள் தற்கொலை தொடர்பான தகவல்கள் தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளிவிவரங்களில் இடம்பெறாதது ஏன் என மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி பதில் அளித்துள்ளார்.

அதில் மாநில அரசுகள் , விவசாயிகள் தற்கொலை தொடர்பாக எவ்வித தரவுகளையும் தேசிய குற்ற ஆவண காப்பகத்திடம் வழங்கவில்லை என தெரிவித்துள்ளார். மற்ற துறைகளில் பணியாற்றுவோரின் தற்கொலைகள் குறித்த தகவல்களை வழங்கும் மாநில அரசுகள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்களின் தற்கொலை தொடர்பான விவரங்களை வழங்குவதில்லை என அமைச்சர் கிஷன் ரெட்டி கூறியுள்ளார். இதன் காரணமாகவே, தேசிய அளவில் விவசாயிகள் தற்கொலை தொடர்பான தரவுகள் தனியாக வெளியிடப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com