"பலாப்பழம்" கேரள மாநிலப் பழமானது

"பலாப்பழம்" கேரள மாநிலப் பழமானது
"பலாப்பழம்" கேரள மாநிலப் பழமானது

கேரள மாநிலத்தின் அதிகாரப்பூர்வ பழமாக பலாப்பழம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலாப்பழத்தை நாடு முழுவதும் பிரபலப்படுத்தும் முயற்சியில் அம்மாநில மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. 

இது குறித்து கேரளம் மாநில சட்டப்பேரவையில் நேற்று உரையாற்றிய அம்மாநிலத்தின் வேளாண்துறை அமைச்சர் வி.எஸ்.சுனில்குமார், பலாப்பழத்தை மாநிலப் பழமாக  அறிவித்தார். பின்னர் அவர் பேசியது " பலாப்பழத்தை மாநிலப் பழமாக அறிவிக்கிறேன். மேலும் நாடு முழுவதிலும் மட்டுமின்றி, அதன் தரம் குறித்து உலகம் முழவதிலும் பிரபலப்படுத்த வேண்டும்" என கேட்டுக் கொண்டார். இதனால் கேரளா மிகுந்த பயனடையும், மேலும் வெளிநாட்டினவருக்கு பலாப்பழம் மீது ஒரு ஈர்ப்பும் ஏற்படும் என தெரிவித்தார்.

கேரள மாநிலம் ஆண்டுக்கு 30 கோடிக்கும் அதிகமான பலாப்பழங்களை உற்பத்தி செய்து வருகிறது. எவ்வித உரமும் பயன்படுத்தாமல் இயற்கை முறையில் இந்தப் பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. இதனால் கேரள பலா விவசாயிகள் மிகுந்த லாபமடைந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு முன் யானை, கனிக்கோனா மலர், முத்து சிப்பி மீன் ஆகியவற்றையும் கேரளா மாநிலத்தின் அதிகாரப்பூர்வ பொருட்களாக அம்மாநில அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com