ஆன்லைன் பணப்பரிவர்த்தனை : கட்டணத்தைக் குறைத்தது எஸ்.பி.ஐ
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் இணையதளம் மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, இனி 75% கட்டணம் குறைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் இணையதளம் அல்லது செல்ஃபோன் ஆப்பை பயன்படுத்தி என்இஎஃப்டி (NEFT) மற்றும் ஆர்டிஜிஎஸ் (RTGS) மூலமாக ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக் கணக்குக்கு பணப்பரிமாற்றம் செய்வதற்கான கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் முறையிலான பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை ஸ்டேட் பாங்க் மேற்கொண்டுள்ளது. முந்தையக் கட்டணத்தோடு ஒப்பிடும்போது, 75% கட்டணக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலமாக ஐஎம்பிஎஸ் எனப்படும் உடனடி பணப்பரிமாற்றத்துக்கான கட்டணத்தை ஜூலை 1-ஆம் தேதி முதல் மாற்றியமைத்தது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.