நாளை வாக்கு எண்ணிக்கை: புதுச்சேரியின் நட்சத்திர வேட்பாளர்கள் யார் யார்?

நாளை வாக்கு எண்ணிக்கை: புதுச்சேரியின் நட்சத்திர வேட்பாளர்கள் யார் யார்?
நாளை வாக்கு எண்ணிக்கை: புதுச்சேரியின் நட்சத்திர வேட்பாளர்கள் யார் யார்?

புதுச்சேரியிலும் நாளை சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் சூழலில், புதுச்சேரி தேர்தல் களத்தில் உள்ள முக்கிய வேட்பாளர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.

புதுச்சேரியில 15 வது சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தலில் ஏற்கனவே ஆட்சியில் இருந்த மதச்சார்பற்ற கூட்டணிகளான காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒரு அணியில் போட்டியிடுகின்றன. இந்த அணியை பொறுத்தவரை ஆட்சிப்பொறுப்பில் இருந்த அமைச்சர்களில் கந்தசாமி ஏம்பளம் தொகுதியில் போட்டியிடுகிறார். கமலக்கண்ணன் திருநள்ளாறு தொகுதியிலும், ஷாஜகான் காமராஜ் நகரில் போட்டியிடுகிறார்கள். திமுக மாவட்டச் செயலாளர் நாஜிம் காரைக்கால் தெற்கு தொகுதியிலும், சிவா வில்லியனூர் தொகுதியிலும், சிவக்குமார் ராஜ்பவன் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் ஒரு அணியாக போட்டியிடுகிறார்கள். இவர்களில் என் ஆர் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான ரங்கசாமி தட்டாஞ்சாவடி மற்றும் ஏனாம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்து பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைந்தவரான நமச்சிவாயம் மன்னாடிபட்டு தொகுதியில் போட்டியிடுகிறார். பாஜகவின் மாநிலத்தலைவர் சாமிநாதன் லாஸ்பேட்டை தொகுதியில் களமிறங்கியுள்ளார்.

அதிமுக வை பொருத்தவரை அக்கட்சியின் மாநில செயலாளர்களான ஓம்சக்தி. சேகர் உருளையான்பேட்டை தொகுதியிலும், அன்பழகன் உப்பளம் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள். ஆட்சி கலைக்கப்பட்டநிலையில், புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் இம்முறை யாருக்கு புதுச்சேரி மக்கள் வாய்ப்பளிக்கப்போகிறார்கள் என்று பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com