இந்தியா
ஹோலி பண்டிகை: மேடை சரிந்து பா.ஜ.க நிர்வாகிகள் காயம்
ஹோலி பண்டிகை: மேடை சரிந்து பா.ஜ.க நிர்வாகிகள் காயம்
உத்தர பிரதேச மாநிலத்தில், பாஜக சார்பில் நடைபெற்ற ஹோலி பண்டிகை விழாவின்போது மேடை சரிந்து விழுந்ததில் நிர்வாகிகள் காயமடைந்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் சம்பல் நகரில் பாஜக சார்பில், ’ஹோலி மிலன்’ என்ற ஹோலி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடந்த நிகழ்ச்சிக்காக பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. பாஜகவின் விவசாயிகள் அமைப்பின் தலைவர் அவ்தேஷ் யாதவ் உட்பட பல முக்கிய நிர்வாகிகள் மேடையில் ஏறி பேசினர்.
வழக்கத்துக்கு மாறாக அதிகமானவர்கள் மேடையில் ஏறியதால், மேடை தாங்காமல் திடீரென சரிந்து விழுந்தது. இதனால் மேடையில் இருந்தவர்கள் கீழே விழுந்தனர். ஒருவர் மீது ஒருவர் விழுந்ததால் பலர் காயமடைந்தனர். அவ்தேஷ் யாதவும் இதில் காயமடைந்தார்.
உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.