\
10ஆம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சிஏ படிக்கலாம்

10ஆம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சிஏ படிக்கலாம்

10ஆம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சிஏ படிக்கலாம்
Published on: 

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டயக் கணக்காளர் படிப்பில் சேரலாம் என பட்டயக் கணக்காளர் மையம் தெரிவித்துள்ளது.

சிஏ எனப்படும் பட்டயக் கணக்காளர் படிப்பில் சேர பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என நடைமுறை இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலே பட்டயக் கணக்காளர் படிப்பில் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் தான் பட்டயக் கணக்காளர் படிப்பிற்கான பதிவு செல்லும் எனவும் கூறப்பட்டுள்ளது.

பட்டயக் கணக்காளர் அடிப்படை பாடப்பிரிவு தேர்வில் தேர்ச்சியை அதிகரிக்கும் விதமாகவும், தேர்வுக்கு தயாராகும் காலத்தை அதிகப்படுத்தும் விதமாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பட்டயக் கணக்காளர் மையம் கூறியுள்ளது. இந்த புதிய நடைமுறையின் அடிப்படையில் பட்டயக் கணக்காளர் அடிப்படை பாடப்பிரிவு தேர்வு வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com