ஆந்திராவின் வளர்ச்சிக்கு எஸ்ஆர்எம் பல்கலை. உதவும்: வெங்கய்யா நாயுடு பேச்சு

ஆந்திராவின் வளர்ச்சிக்கு எஸ்ஆர்எம் பல்கலை. உதவும்: வெங்கய்யா நாயுடு பேச்சு

ஆந்திராவின் வளர்ச்சிக்கு எஸ்ஆர்எம் பல்கலை. உதவும்: வெங்கய்யா நாயுடு பேச்சு
Published on

அமராவதியில் அமைந்துள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் ஆந்திர மாநிலத்தின் கல்வி ‌வளர்ச்சிக்கு உதவும் என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்‌.

எஸ்ஆர்எம் கல்வி வளாகத்தை திறந்து‌வைத்துப் பேசிய வெங்கய்ய நாயுடு, "புதிய தலைநகரில் முதல் கல்வி வளாகம் அமைத்ததற்காக எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வளவு‌‌ பெரிய கட்டடத்தை ‌ஐந்தே மாதங்களில் கட்டி முடித்துள்ளனர். இதற்காக எஸ்ஆர்எம் நிர்வாகத்துக்கு பாராட்டுகள். ஒன்றை முடிவு‌செய்து விட்டால், அதை அவர்கள் செய்து முடிப்பார்கள் என்பதை இது காட்டுகிறது" என்றார்.

முன்னதாக, ஆந்திர‌ மாநி‌லத் தலைநகர் அமராவதியில், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் கல்வி வளாகம் இன்று திறக்கப்பட்டது. இந்த கல்வி வளாகத்தை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுவும் சேர்ந்து திறந்து வைத்தனர். எஸ்ஆர்எம் பல்லைக்கழக நிறுவனரும், வேந்தருமான பாரிவேந்‌தர் மற்றும் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக நிர்வாக அறங்காவலர் சத்தியநாராயணன் அப்போது உடனிருந்தனர். அமராவதியில் உருவாகியுள்ள எஸ்ஆர்எம் கல்வி வளாக‌த்தில் ஆந்திராவின் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒரு மாணவிக்கு இலவசக் கல்வி வழங்கப்படும் என எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் நிறுவன‌ரும் வேந்தருமான பாரிவேந்தர் அப்போது தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com