கடலை விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் உதவி செய்த போலீஸ் எஸ்பி

கடலை விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் உதவி செய்த போலீஸ் எஸ்பி
கடலை விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் உதவி செய்த போலீஸ் எஸ்பி

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஸ்ரீநகரில் கடலை விற்று பிழைப்பை நடத்திக் கொண்டு இருந்த 90 வயது முதியவருக்கு தன் சொந்தப் பணத்தில் இருந்து ரூ.1 லட்சம் தந்து உதவியுள்ளார் காவல்துறை எஸ்பி ஒருவர்.

ஸ்ரீநகரின் போரி கதால் பகுதியில் கடலை விற்று பிழைப்பை நடத்தி வருபவர் 90 வயதான அப்துல் ரெஹ்மான். அண்மையில் இவர் தன்னுடைய இறுதிச் சடங்குக்காக சேர்த்து வைத்திருந்த ரூ.1 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் மனிதநேயமில்லாமல் திருடிக்கொண்டு சென்றுவிட்டார்கள். அவரிடமிருந்து திருடியது மட்டுமல்லாமல் அவரை காயப்படுத்தியுள்ளனர். இவர் தன்னுடைய பணம் திருடு போனது குறித்து கதறிய வீடியோவை யாரோ சிலர் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர்.

இது சீனியர் எஸ்பி சந்தீப் செளத்ரி கண்களில் பட்டது. அது அவர் கண்களை குளமாக்கியது. இதனால் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட சந்தீப் செளத்ரி அப்துல் ரஹ்மானுக்கு தன் சொந்தப் பணத்தில் இருந்து ரூ.1 லட்சம் கொடுத்துள்ளார். இதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்த ரஹ்மானின் புகைப்படத்தை சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது குறித்து ஸ்ரீநகர் மாநகரின் மேயர் பர்வைத் அகமது காத்ரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்.

"ஒரு எளிய மனிதருக்கு மனித நேய உதவியை செய்துள்ளார் காவல்துறை எஸ்பி சந்தீப் செளத்ரி. வெறும் கடலைகளை வைத்து பிழத்தவருக்கு நிகழ்ந்த அநீதிக்கு நீதி சிறப்பாக கிடைத்துள்ளது" என்று பாராட்டியுள்ளார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com