\
காஷ்மீர் என்கவுன்டர் : 3 தீவிரவாதிகள் பலி

காஷ்மீர் என்கவுன்டர் : 3 தீவிரவாதிகள் பலி

காஷ்மீர் என்கவுன்டர் : 3 தீவிரவாதிகள் பலி
Published on

காஷ்மீர் பகுதியில் இன்று காலை நடந்த என்கவுன்டரில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் அருகே சட்டபால் என்ற பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து அங்கு சென்றனர். அந்த இடத்தை சுற்றிவளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்குள்ள வீடு ஒன்றில் இருந்து தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். இதற்கு பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர். பல மணி நேரமாக துப்பாக்கிச்சண்டை நீடித்தது. இதில், 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் காயம் அடைந்தார்.  பாதுகாப்பு படையினர் வந்த வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்தார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com