பிரதமர் மோடியுடன் இன்று இலங்கை பிரதமர் சந்திப்பு

பிரதமர் மோடியுடன் இன்று இலங்கை பிரதமர் சந்திப்பு

பிரதமர் மோடியுடன் இன்று இலங்கை பிரதமர் சந்திப்பு
Published on

பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை பிரதமர் விக்ரம்சிங்கே இன்று சந்திக்கிறார்.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சே அண்மையில் இந்தியா வந்தார். அவர் பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்துவிட்டுச் சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கைப் போரில் இந்திய அரசு உதவியதாக கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து சமீபத்தில் தன்னை கொலை செய்ய இந்திய உளவுத்துறை முயற்சித்ததாக தற்போதைய இலங்கை ஜனாதிபதி சிறிசேன குற்றச்சாட்டை முன்வைத்தார். இதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்தது.

இலங்கை அரசு இதற்கு மறுப்பு தெரிவித்தது. அத்துடன் இந்திய புலனாய்வு அமைப்பு மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இலங்கை பிரதமர் விக்ரமசிங்கே இந்திய வருகை தந்துள்ளார். அவருடன் இரண்டு அமைச்சர்களும் வருகை தந்துள்ளனர். இன்று பிரதமர் மோடியை இலங்கை பிரதமர் விக்ரமசிங்கே சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்பில் தமிழக மீனவர்கள் பிரச்னை குறித்தும் ஆலோசிக்கப்படும் எனக்கூறப்படுகிறது. ராஜ்பக்சே பேச்சு, சிறிசேன குற்றச்சாட்டு போன்ற சர்ச்சைகள் எழும்பிய நிலையில், இன்று நடைபெறும் சந்திப்பு முக்கியத்துவம் வாந்ததாக கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com