பயங்கரவாதியா? பாஸ்போர்ட் இல்லாமல் கேரளாவில் சுற்றிய இலங்கை நாட்டவர் கைது!

பயங்கரவாதியா? பாஸ்போர்ட் இல்லாமல் கேரளாவில் சுற்றிய இலங்கை நாட்டவர் கைது!

பயங்கரவாதியா? பாஸ்போர்ட் இல்லாமல் கேரளாவில் சுற்றிய இலங்கை நாட்டவர் கைது!
Published on

பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் எதுவும் இல்லாமல் திருவனந்தபுரத்தில் சுற்றிய இலங்கை நாட்டவர் கைது செய்யப்பட்டார். அவர் பயங்கரவாதியாக இருக்கலாம் எனக் கருதி தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் உட்பட பல்வேறு பகுதிகளில் நடந்த தற்கொலை தாக்குதலில் 250-க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 11 இந்தியர்கள் உட்பட வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் 30 பேரும் கொல்லப்பட்டனர்.

இந்த சதி செயலில் ஈடுபட்ட ஐஎஸ் அமைப்பினர், தாக்குதலுக்கு முன் இந்தியாவில் கேரளா, பெங்களூரு மற்றும் காஷ்மீர் பகுதிகளுக்கு சென்று வந்ததாக இலங்கை ராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக  தெரிவித்திருந்தார். தற்கொலை தாக்குதல் குறித்து அங்கு என்ன மாதிரியான பயிற்சிகளை அவர்கள் மேற்கொண்டார்கள் என்பது தெரியவில்லை என்றும் பிபிசிக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்திருந்தார். இதையடுத்து சென்னை, பெங்களூரு உட்பட பல பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

இதற்கிடையே கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் எதுவும் இல்லாமல் அலைந்துகொண்டிருந்த இலங்கையை சேர்ந்த மலுக் ஜுத் மில்கான் டயாஸ் (30) என்பவரை போலீசார் கைது செய்தனர். 

திருவனந்தபுரம் தம்பானூர் பேருந்து நிலையத்தில் டயாஸ்,  போனில் பேசிக்கொண்டிருந்தார். அவரது பேச்சில் சந்தேகமடைந்த அக்கம் பக்கத் தினர், போலீசாரிடம் தெரிவித்தனர். விரைந்து வந்த அவர்கள் விசாரித்தனர். அப்போது, தான் விமான நிலையத்தில் பணியாற்றுவதாக தெரி வித்தார் டயாஸ். அது பொய் என்பது பின்னர் தெரியவந்தது. அவரிடம் பாஸ்போர்ட், விசா எதுவும் இல்லை.

நாகர்கோவிலில் இருந்து கேரளாவின் வர்கலாவுக்கு செல்லும் ரயில் டிக்கெட் இருந்தது. அவர் கள்ளத்தோனியில் தமிழகம் வந்து அங்கிருந்து திருவனந்தபுரம் வந்திருக்கலாம் என கூறும் போலீசார், அவரை கைது செய்து விசாரித்துவருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com