இந்தியா வந்தடைந்தது கொரோனா வைரஸ் எதிர்ப்புக்கான ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி!

இந்தியா வந்தடைந்தது கொரோனா வைரஸ் எதிர்ப்புக்கான ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி!
இந்தியா வந்தடைந்தது கொரோனா வைரஸ் எதிர்ப்புக்கான ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி!

கொரோனா வைரஸ் எதிர்ப்புக்காக ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் தடுப்பூசி இன்று இந்தியா வந்தடைந்தது.

இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. தற்போது வரை இந்தியாவில் 15 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இன்று முதல் 18 வயதில் இருந்து 44 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி இருக்கிறது. இதனால் அதிக தடுப்பூசி தேவைப்படுகிறது. அதற்கு போதுமான அளவிற்கு தற்போது போடப்படும் 2 தடுப்பூசிகளின் சப்ளை இல்லை. எனவே வேறு தடுப்பூசிகளையும் வாங்குவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மருந்தை வழங்க அந்த நாட்டு அரசு முன்வந்தது. இது சம்பந்தமாக பிரதமர் மோடி சமீபத்தில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் பேசினார். இந்நிலையில் ஸ்புட்னிக் தடுப்பூசி முதல் கட்டமாக இன்று வந்தடைந்தது. மேலும் ஜூன் மாதத்திற்குள் சுமார் 50 லட்சம் ஸ்புட்னிக் தடுப்பூசி இந்தியா வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com