இந்தியா வரும் ஸ்புட்னிக் கொரோனா தடுப்பு மருந்து.. அடுத்த வாரம் முதல் சோதனை?
ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்ட SPUTNIK V கொரோனா தடுப்பு மருந்து, அடுத்த வாரம் இந்தியாவில் சோதனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவின் SPUTNIK V என்ற கொரோனா தடுப்பு மருந்தை, கடந்த ஆகஸ்ட் மாதம் அந்நாட்டு சுகாதாரத் துறை அங்கீகரித்தது. அந்த மருந்தை இந்தியாவில் சோதனை செய்ய டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகம் அனுமதி பெற்றுள்ளதை அடுத்து, SPUTNIK V மருந்து, அடுத்த வாரம் இந்தியா வரவழைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் மனிதர்களுக்கு அந்த மருந்தை செலுத்தி சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 180 தன்னார்வலர்கள் பரிசோதனைக்கு பதிவு செய்துள்ளதாகவும், 21 நாட்கள் இடைவெளியில் ஒன்று, இரண்டு அல்லது மூன்று முறை தன்னார்வலருக்கு SPUTNIK V தடுப்பு மருந்தை செலுத்தி 7 மாதங்கள் கண்காணிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கான்பூர் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.