அம்பானி மகள் திருமண விழாவில் ஹிலரி கிளின்டன்

அம்பானி மகள் திருமண விழாவில் ஹிலரி கிளின்டன்

அம்பானி மகள் திருமண விழாவில் ஹிலரி கிளின்டன்
Published on

நாட்டின் முன்னணி தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள் திருமண விழாவில் பங்கேற்க அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டனின் மனைவி ஹிலரி இந்தியா வந்துள்ளார். 

ராஜஸ்தானின் உதய்பூரில் நடைபெறவுள்ள ஈஷா அம்பானியின் திருமண விழா ஹிலரி பங்கேற்று மணமக்களை வாழ்த்தவுள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவரான முகேஷ் அம்பானி, நீதா அம்பானி தம்பதியின் மகளான ஈஷா அம்பானிக்கு ஆனந்த் பரிமள் என்பவருடன் வரும் 12ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.

இந்தியா வந்த ஹிலாரி கிளிண்டனை மும்கேஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானி உதய்ப்பூர் விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இந்திய பாரம்பரியப்படி குர்தி, பேண்ட் அணிந்து வந்தார் ஹிலாரி. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com