\
குழந்தை சுர்ஜித் மீட்புப்பணி : முதல்வரிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி

குழந்தை சுர்ஜித் மீட்புப்பணி : முதல்வரிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி

குழந்தை சுர்ஜித் மீட்புப்பணி : முதல்வரிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி
Published on

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி குறித்து பிரதமர் மோடி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கேட்டறிந்தார்.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணிகள் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், குழந்தையின் மீட்பு பணி குறித்து தமிழக முதல்வர் பழனிசாமியிடம், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்துள்ளார். 

இதுகுறித்த தகவலை பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில், “குழந்தை சுர்ஜித்திற்காக தன்னுடைய பிரார்த்தனை இருக்கும். குழந்தையை மீட்கும் பணி குறித்து முதல்வர் பழனிசாமியிடம் கேட்டறிந்தேன். குழந்தையை பாதுகாப்பாக மீட்டெடுக்க அனைத்து வகையான முயற்சிகளும் செய்யப்பட்டு வருகின்றன” என்று அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழிலும் மோடி ட்வீட் செய்து இருந்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com