உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட போர் ஹெலிகாப்டர் நாட்டிற்கு அர்ப்பணிப்பு - சிறப்பம்சங்கள் என்ன?

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட போர் ஹெலிகாப்டர் நாட்டிற்கு அர்ப்பணிப்பு - சிறப்பம்சங்கள் என்ன?
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட போர் ஹெலிகாப்டர் நாட்டிற்கு அர்ப்பணிப்பு - சிறப்பம்சங்கள் என்ன?

முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இலகு ரக போர் ஹெலிகாப்டர் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.

பிரச்சந்த் என பெயரிடப்பட்டுள்ள இந்த இந்த இலகுரக போர் ஹெலிகாப்டர்கள் எதிரி நாட்டு வான்வெளி தாக்குதல்களை தடுக்கும் வகையில்  வடிவமைக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 5,000 மீட்டர் உயரத்திலிருந்து உடனடியாக தரை இறங்கி கணிசமான ஆயுதங்கள் மற்றும் எரிபொருட்களை மீண்டும் எடுத்துக்கொண்டு உடனடியாக புறப்படக்கூடிய இலகு ரக ஹெலிகாப்டர்கள் இவைதான். உலகில் இத்தகைய வடிவமைப்புடன் உள்ள ஹெலிகாப்படர்கள் இது மட்டுமே. 20 எம் எம் டியுரெட் துப்பாக்கிகள், 70 எம்எம் ஏவுகனைகளை பயன்படுத்தும் வண்ணம் இதன் ஆயுத வடிவமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது

5.8 டன் எடையுடைய இந்த இலகு ரக ஹெலிகாப்டர்கள் எதிரிகளின் தாக்குதல்களை தாங்கும் வகையிலும், இரவு நேரங்களில் துல்லியமாக தாக்குதல் நடத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. கீழே விழுந்தாலும் கூட மிகக் குறைவான அளவில் மட்டுமே சேதம் ஏற்படும் வகையிலும் இதனுடைய லேண்டிங் கியர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட போர் ஹெலிகாப்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் ஹச்.ஏ.எல். நிறுவனம் இதனை வடிவமைத்து உள்ளது.

தேடுதல் பணி, மீட்புப் பணி, டேங்கர்கள் அளிப்பு, தரைப்படை தாக்குதல் எனப் பல முக்கியப் பணிகள் இந்த ஹெலிகாப்டர்களில் மேற்கொள்ளப்படுகின்றது. இரண்டு என்ஜின்கள் மூலம் அதிக திறனுடன் செயல்படும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளது. எதிரிகளின் ரேடாரில் இருந்து தப்பிக்கும் வகையில் கவுண்டர் மெசர் டிஸ்பென்சிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. எதிரி நாடுகளின் வான்வெளியை கடந்து தாக்குதல்கள் மேற்கொள்ள முடியும். அதிகபட்சமாக மணிக்கு 268 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இது தொடர்ந்து மூன்று மணி நேரம் பறக்கும் வகையிலும், தரையில் இருந்து 6.5 கிலோமீட்டர் தொலைவு வரை பறக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு மார்ச் மாதம் நடைபெற்ற பாதுகாப்பு துறைக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 15 இலகு ரக போர் விமானங்களை வாங்க ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில் சுமார் 3,887 கோடி ரூபாய் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 10 ஹெலிகாப்டர்கள் இந்திய விமான படைக்கும், ஐந்து ஹெலிகாப்டர்கள் இராணுவத்திற்கும் வழங்கப்பட உள்ளது. இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய விமானப்படைக்கு ஹெலிகாப்டர்கள் ஒப்படைக்கப்பட்ட நிலையில் வரும்  பெங்களூருவில் நடைபெறும் நிகழ்ச்சியில் ராணுவத்திற்கு ஹெலிகாப்டர்கள் ஒப்படைக்கப்படுகிறது.

- நிரஞ்சன்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com