திருப்பதியில் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கு சிறப்பு தரிசனத்துக்கு அனுமதி

திருப்பதியில் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கு சிறப்பு தரிசனத்துக்கு அனுமதி
திருப்பதியில் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கு சிறப்பு தரிசனத்துக்கு அனுமதி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு தரிசனம் தொடங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

உலகப்புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், ஒரு வயது குழந்தையுடன் பெற்றோர்கள் செல்வதற்கான சிறப்பு நுழைவு வாயில் வழியே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா அச்சம் காரணமாக, 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தரிசனம் நிறுத்தப்பட்டுள்ளது.


தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து கட்டுப்பாடுகள் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு நுழைவு தரிசனத்தை அனுமதிக்க தேவஸ்தான அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது.

திங்கள் முதல் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் காலை 10 மணிக்கு கோவிலின் தெற்கு மாட வீதியில் உள்ள சிறப்பு வரிசை அனுமதிக்கப்படுவர். வெள்ளிக்கிழமை மட்டும் மாலை 3 மணிக்கு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். ஒவ்வொரு நாளும் இந்த வகையில் ஆயிரம் பேர் அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.




Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com