செப்டம்பரில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டம்.. பொதுசிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுமா?

சிறப்பு கூட்டத்தொடரில் பொது சிவில் சட்டம் தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்படுமா என எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

செப்டம்பர் மாதத்தில் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என அரசு அறிவித்துள்ளதால் முன்கூட்டியே நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுமோ என எதிர்க்கட்சிகளிடையே பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

சிறப்பு கூட்டத்தொடரில் பொது சிவில் சட்டம் தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்படுமா அல்லது மழைக்கால கூட்டத் தொடரின் இறுதி நாளில் தாக்கல் செய்யப்பட்ட இந்திய குற்றவியல் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் சாட்சிய சட்டம் ஆகியவற்றுக்கு பதிலாக கொண்டுவரப்பட்டுள்ள புதிய மசோதாக்கள் விவாதத்துக்கு வருமா எனவும் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com