“உரிய பாதுகாப்பு இருந்திருந்தால் ராஜிவ் உயிரோடு இருந்திருப்பார்’ - எஸ்பிஜி மசோதாவுக்கு காங். எதிர்ப்பு

“உரிய பாதுகாப்பு இருந்திருந்தால் ராஜிவ் உயிரோடு இருந்திருப்பார்’ - எஸ்பிஜி மசோதாவுக்கு காங். எதிர்ப்பு
“உரிய பாதுகாப்பு இருந்திருந்தால் ராஜிவ் உயிரோடு இருந்திருப்பார்’ - எஸ்பிஜி மசோதாவுக்கு காங். எதிர்ப்பு

முன்னாள் பிரதமர் மற்றும் அவரது குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் எஸ்பிஜி சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செயப்பட்டுள்ளது.

பிரதமர் பதவியில் இருக்கும் ஒருவருக்கு மட்டும் உரியமுறையில் பாதுகாப்பு வழங்கும் பணியை  சிறப்பு பாதுகாப்பு குழு என்ற எஸ்பிஜி செய்து வருகிறது. இந்தக் குழு பதவிக்காலம் முடிந்த பிறகும் பல ஆண்டுகளுக்கு முன்னாள் பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளித்து வருகிறது. அவ்வாறு பாதுகாப்பு அளிக்கும் போது அதிகப்படியான செலவு அரசுக்கு ஏற்படுகிறது. இந்தச் செலவுகளை குறைக்கும் முயற்சியில் மத்திய பாஜக அரசு திட்டமிட்டு உள்ளது. 

அதனடிப்படையில் பதவியில் இருக்கும் பிரதமர் மற்றும் அவருடன் தங்கியிருக்கும் குடும்பத்தினருக்கு மட்டும் சிறப்பு பாதுகாப்பு அளிக்கும் எஸ்பிஜி சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் இன்று தாக்கல் செய்து உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார். இந்தச் சட்டத் திருத்த மசோதா திருத்தம் செய்யப்பட்டால் முன்னாள் பிரதமர் ஒருவருக்கு பதவி முடிந்த 5 ஆண்டுகளுக்கு மட்டுமே சிபிஜி பாதுகாப்பு வழங்கப்படும். அதே போல் அவரது குடும்பத்தை சார்ந்தவர்களுக்கும் 5 ஆண்டுகள் மட்டுமே பாதுகாப்பு வழங்கப்படும். 

இந்தச் சட்டத் திருத்தமசோதாவிற்கு காங்கிரஸ் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. காங்கிரஸை சேர்ந்த மனீஷ் திவாரி, ‘அச்சுறுத்தலை வைத்தே பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். அரசியல் காரணங்கள் முக்கியமல்ல; கடந்த காலங்களில் முன்னாள் பிரதமர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகவில்லையா? ஆகவே அதையும் எடுத்து கொண்டு விவாதிக்க வேண்டும் என்றார். மேலும் கொலைகாரர்கள் பாதுகாப்பு அகற்றப்படும் வரை காத்து கொண்டிருப்பார்கள் என்றும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தால் அவர் இப்போது உயிருடன் இருந்திருப்பார் என்றும் அவர் வாதிட்டார். 

அதற்குப் பதிலளித்த அமித் ஷா, முன்பு இருந்த எஸ்பிஜி மசோதாவின் அசல் தன்மையை இது மீட்டெடுக்கும் என்றும் முந்தைய அரசு கொண்டு வந்த சட்டம் நீர்த்து போனது என்றும் அவர் பதிலளித்தார். காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு கடந்த 28 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த சிறப்பு படை பாதுகாப்பை மத்திய அரசு சமீபத்தில் வாபஸ் பெற்றது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com