“ராமர் கோயில் கட்டுவதற்கு சிறப்புச்சட்டம் இயற்றவேண்டும்” - உத்தவ் தாக்கரே
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு சிறப்புச் சட்டம் இயற்றவேண்டும் என சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே வலியுறுத்தியுள்ளார்.
மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில், சிவசேனா சார்பில் நடந்த தசரா பண்டிகை கொண்டாட்டத்தில் உத்தவ் தாக்கரே, அவரது மகனும் ஒர்லி தொகுதி வேட்பாளருமான ஆதித்ய தாக்கரே உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய உத்தவ் தாக்கரே, இந்தியாவை விரும்பும் இஸ்லமியர்களின் உரிமைகளுக்கு போராடுவோம் என்றார்.
ராமர் கோயில் கட்டுவதற்கு வகை செய்யும் சிறப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய அவர், தேர்தல் ஆதாயங்களுக்காக ராமர் கோயில் விவகாரத்தை எழுப்பவில்லை என்றார். கூட்டணி வேட்பாளர்களுக்கு வெற்றிக்கு சாதகமான வகையில் தொண்டர்கள் பணியாற்ற வேண்டும் என்றும், சிவசேனாவுக்கு இரண்டாவது விஜயதசமி வாக்கு எண்ணிக்கை நாளான வரும் 24ஆம் தேதி என்று உத்தவ் தாக்கரே குறிப்பிட்டார்.