\
ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் 

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் 

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் 
Published on: 

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்திற்கு சிபிஐ நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரி ப.சிதம்பரத்திற்கும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கும் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார் டெல்லி சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஒ.பி. சைனி. மேலும் இருவரும் இந்தியாவை விட்டு வெளியே செல்வதற்கும் தடை விதித்து நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.  

முன்னதாக ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்க கூடாது என சிபிஐ கோரிக்கை வைத்திருந்தது. ஆனால் சிபிஐயின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. இந்நிலையில் முன் ஜாமீன் வழங்கி நீதிபதி சைனி உத்தரவிட்டுள்ளார். முன் ஜாமீன் கிடைத்ததால் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ, அமலாக்கத்துறை கைது செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com