\
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி: இந்திய அணி வெற்றி பெற சிறப்பு பூஜை

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி: இந்திய அணி வெற்றி பெற சிறப்பு பூஜை

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி: இந்திய அணி வெற்றி பெற சிறப்பு பூஜை
Published on

பாகிஸ்தானுக்கு எதிராக இன்று நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா வெற்றி பெற சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா-பாகிஸ்தான் போட்டி, மான்செஸ் டரில் இன்று நடக்கிறது. இதற்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன. உலகம் முழுவதும் இருந்து ஏராளமான ரசிகர்கள், இந்தப் பரபரப்பானப் போட்டியை காண, மான்செஸ்டர் வந்துள்ளனர்.

உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி தோல்வி அடைந்ததில்லை. இந்த வரலாறை மாற்றும் முனைப்பில் பாகிஸ்தானும், வெற்றியைத் தொடரும் வேட்கையில் இந்திய அணியும் களமிறங்குவதால் இந்தப் போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டி, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் சிறப்பு பூஜையும் கங்கை நதியில் ஆரத்தி வழிபாடும் நடத்தப்பட்டது. இதில் தேசிய கொடியை ஏந்தியபடி, அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான ரசிகர்கள் கலந்துகொண்டனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com