நோபல் பரிசு வென்ற 9 இந்தியர்களில் 8 பேர் பிராமணர்கள்: குஜராத் சபாநாயகர்

நோபல் பரிசு வென்ற 9 இந்தியர்களில் 8 பேர் பிராமணர்கள்: குஜராத் சபாநாயகர்
நோபல் பரிசு வென்ற 9 இந்தியர்களில் 8 பேர் பிராமணர்கள்: குஜராத் சபாநாயகர்

நோபல் பரிசு வென்ற 9 இந்தியர்களில் 8 பேர் பிராமணர்கள் என்று குஜராத் மாநில சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி கூறியுள்ளார்.

மெகா பிராமணர் வர்த்தக உச்சி மாநாட்டு தொடக்க விழாவில் குஜராத் சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி கலந்து கொண்டு பேசினார். அப்போது, பிராமணர்களின் பல்வேறு பெருமைகளை அவர் எடுத்துக் கூறினார். அரசியலமைப்பு வரைவை தயார் செய்ததில் அம்பேத்கருக்கு முழு உதவி செய்ததே ஒரு பிராமணர்தான் என அவர் கூறினார்.

இதுகுறித்து அவர் பேசிய போது, “60 நாடுகளின் அரசியலமைப்பு சட்டங்களை முழுமையாக ஆராய்ந்து அதன் பிறகே நம்முடைய அரசியலமைப்பு சட்ட வரைவு தயாரிக்கப்பட்டது என்பது தெரியுமா?. அம்பேத்கருக்கு இந்த அரசியலமைப்பு வரைவை யார் தயார் செய்து கொடுத்தது என்பது தெரியுமா?. அரசியலமைப்பு என்று வருகையில் அனைத்து பெருமையையும் நாம் அம்பேத்கருக்கு வழங்குகிறோம்.

இருப்பினும், அம்பேத்கரே அவரது சொந்த வார்த்தைகளில், அரசியலமைப்பு வரைவு பி.என்.ராவ் எனப்படும் ஒரு பிராமணரால் தயாரிக்கப்பட்டது என கூறியுள்ளார். பிராமணர்கள் மற்றவர்களுக்குப் பின்னால் நின்று அவர்களை ஊக்கப்படுத்தி வந்துள்ளார்கள் என்பதையே வரலாறு நமக்கு கூறுகின்றது. அதேபோல்தான், அம்பேத்கருக்கு பின்புலமாக பி.என்.ராவ் இருந்துள்ளார். 1949ம் ஆண்டு நடைபெற்ற அரசியலமைப்பு சபையில் ஆற்றிய உரையின் போது, ‘உண்மையில் இந்தப் பெருமைகள் என்னைச் சார்ந்தது அல்ல. பி.என்.ராவ்-க்கு சேர வேண்டியது’ என அம்பேத்கர் தெரிவித்துள்ளார் என்பதால் அவரை நினைத்து நாம் பெருமை கொள்கிறோம்” என்றார் திரிவேதி.

அத்துடன், “இதுவரை 8 இந்தியர்கள் நோபல் பரிசு வென்றுள்ளனர். அதில், 7 பேர் பிராமணர்கள். சமீபத்தில் நோபல் பரிசு வென்ற ஒன்பதாவது இந்தியர் யார் தெரியுமா?. ஆம், அபிஜித் பானர்ஜி என்ற பிராமணர்தான்” என்றார்.

User

இந்தக் கூட்டத்தில் குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி கலந்து கொண்டார். அவர் பேசுகையில், “சிமன்பாய் சுக்லா, சூர்யகாந்த் ஆச்சார்யா மற்றும் அசோக் பாட் ஆகிய மூன்று பிராமணர்கள் தான் குஜராத் மாநில பாஜகவிற்கு அடித்தளமிட்டனர். அதேபோல், குஜராத்தில் ஜன சங்கத்திற்கும் அவர்கள் அடித்தளம் அமைத்தனர். பிராமணர்கள் எப்போது தேச நலனுக்காகவே பேசுவார்கள். அதனால்தான், அவர்கள் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சேர்கிறார்கள்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com