\
காந்தி சிலை முன் கதறி அழுத அரசியல் தலைவர்: கிண்டலடித்த நெட்டீசன்ஸ்

காந்தி சிலை முன் கதறி அழுத அரசியல் தலைவர்: கிண்டலடித்த நெட்டீசன்ஸ்

காந்தி சிலை முன் கதறி அழுத அரசியல் தலைவர்: கிண்டலடித்த நெட்டீசன்ஸ்
Published on: 

உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர் ஃபிரோஸ் கான், மகாத்மா காந்தியின் சிலை முன் கண்ணீர் விட்டு அழுத காட்சி விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. 

மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாளில் உத்தரப் பிரதேசத்தின் சம்பல் பகுதியில் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் ஃபிரோஸ் கான், தனது தொண்டர்களுடன் காந்தி சிலையை சுத்தப்படுத்தி மரியாதை செலுத்தினார். பின்னர் சிலைக்கு கீழே மண்டியிட்ட ஃபிரோஸ் கான், எங்களை விட்டு எங்கு சென்றீர்கள்? என்றும் கடின உழைப்பில் விடுதலை வாங்கித் தந்த தாங்கள் தற்போது எங்களுடன் இல்லை என்பது வேதனை அளிப்பதாகவும் கூறி அழுது உணர்ச்சிவசப்பட்டார். 

அவருடன் அவரது அருகில் இருந்த தொண்டர் ஒருவரும் அழுதார். இதைக் கண்ட சமூக வலைத்தளத்தினர் ஃபிரோஸ் கானும் அவரது தொண்டரும் சிறந்த நடிகர்கள் என்றும் இவர்களுக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம் என்பது போன்ற பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com