\
“ரயில்வே வேலைக்கு இடைத்தரகர்களை அணுக வேண்டாம்” - தெற்கு ரயில்வே எச்சரிக்கை!

“ரயில்வே வேலைக்கு இடைத்தரகர்களை அணுக வேண்டாம்” - தெற்கு ரயில்வே எச்சரிக்கை!

“ரயில்வே வேலைக்கு இடைத்தரகர்களை அணுக வேண்டாம்” - தெற்கு ரயில்வே எச்சரிக்கை!
Published on

ரயில்வே வேலைக்கு இடைத்தரகர்களை அணுக வேண்டாம் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

ரயில்வே துறையில் வேலைபார்க்க பணியாளர்கள் அதிகாரப்பூர்வ ரயில்வே பணியாளர் தேர்வு நிறுவனங்கள் மூலம் மட்டுமே தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்கு இடைத்தரகர்கள் யாரும் கிடையாது. அவர்களை நம்பி ஏமாறவேண்டாம் என தெற்கு ரயில்வே அறிவிக்கிறது. யாராவது ரயில்வேயில் வேலைவாங்கி தருகிறேன் என பணம் கேட்டால் தெற்கு ரயில்வே ஊழல் தடுப்புப்பிரிவு அலைபேசி எண் 9003160022 என்ற எண்ணை தொடர்புகொண்டு புகார் செய்யலாம். தமிழக காவல்துறையினரிடமும் புகார் செய்யலாம்.

சமீபத்தில் ரயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக பணமோசடி செய்த இருவரை சென்னை வடபழனியில் தமிழக காவல்துறை மற்றும் தெற்கு ரயில்வே ஊழல் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com