2017ல் உடமைகளை பறிகொடுத்த பயணி.. ரூ17.5 லட்சம் இழப்பீடு வழங்க தென்னக ரயில்வேக்கு உத்தரவு

2017ல் உடமைகளை பறிகொடுத்த பயணி.. ரூ17.5 லட்சம் இழப்பீடு வழங்க தென்னக ரயில்வேக்கு உத்தரவு

2017ல் உடமைகளை பறிகொடுத்த பயணி.. ரூ17.5 லட்சம் இழப்பீடு வழங்க தென்னக ரயில்வேக்கு உத்தரவு

கடந்த 2017 ஆம் ஆண்டில் ஹைதராபாத்திலிருந்து பெங்களூருக்கு பயணித்த பயணி ஒருவரது உடமைகள் திருடு போயுள்ளன. அதில் தங்கம், வெள்ளி மற்றும் ரொக்கமாக பணமும் இருந்துள்ளது. இந்நிலையில் உடமைகளை பறிகொடுத்த பயணிக்கு தென்னக மத்திய ரயில்வே 17.5 லட்ச ரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டும் என ஹைதராபாத் மாவட்ட நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக ‘தி இந்து’ பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது. 

ஹைதராபாத் பகுதியை சேர்ந்த ஷீட்டல் குல்கர்னி என்ற அந்தப் பயணி, கடந்த 2017, ஆகஸ்ட் 12ம் தேதி குடும்பத்தினருடன் உறவினர் ஒருவரின் நிச்சயதார்த்த நிகழ்வுக்கு சென்றுள்ளார். நிச்சயதார்த்த நிகழ்வுக்கு தேவையான 15 லட்சம் மதிப்புள்ள தங்க மற்றும் வெள்ளி நகைகள், 3 லட்ச ரூபாய் ரொக்க பணத்தையும் ரயில் மூலம் கொண்டு சென்றுள்ளார். அப்போது அந்த உடமைகள் இருந்த சூட் கேஸை அடிப்பக்கமாக அறுத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். அவர்கள் வீடு சென்ற பிறகே உடமைகள் திருட்டு போனது தெரிந்துள்ளது.

உடனடியாக இது தொடர்பாக எஸ்வந்த்பூர் ஊரக ரயில்வே போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர். புகாரை பெற்றுக் கொண்ட அவர்கள் முறைப்படி அந்த வழக்கின் நிலை குறித்து புகார்தாரர் தரப்புக்கு பதில் ஏதும் சொல்லாத காரணத்தினால் நுகர்வோர் ஆணையத்தை அணுகியுள்ளனர். அதை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட ஆணையம் பாதிக்கப்பட்ட பயணிக்கு ரயில்வே 17.5 லட்ச ரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com