இந்தியா
பெங்களூருவில் இன்று தென் மாநில முதல்வர்கள் கூட்டம்..!
பெங்களூருவில் இன்று தென் மாநில முதல்வர்கள் கூட்டம்..!
பெங்களூருவில் இன்று நடைபெறும் தென் மாநில முதல்வர்கள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்க உள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பெங்களூருவில் இன்று தென் மாநில முதல்வர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்க உள்ளார். இதுதவிர ஆந்திரா, தெலங்கானா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநில அரசுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
Read Also -> முதல் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி காலமானார்
இன்று பிற்பகல் நடைபெற உள்ள கூட்டத்தில், நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்கள் குறித்து அலோசனை மேற்கொள்ளப்படும் என தகவல்கள் தெரியவந்துள்ளன. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமானம் மூலமாக பெங்களூரு புறப்பட்டார்.