மேற்கு வங்கத்தின் பாஜக முதல்வர் வேட்பாளரா கங்குலி? ஆளுநர் சந்திப்பின் பின்னணி என்ன?

மேற்கு வங்கத்தின் பாஜக முதல்வர் வேட்பாளரா கங்குலி? ஆளுநர் சந்திப்பின் பின்னணி என்ன?
மேற்கு வங்கத்தின் பாஜக முதல்வர் வேட்பாளரா கங்குலி? ஆளுநர் சந்திப்பின் பின்னணி என்ன?

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சவுரவ் கங்குலி, மேற்கு வங்காள ஆளுநர் ஜக்தீப் தன்கரை சந்தித்து பேசினார்.

ஒரு மணி நேரத்திற்கு மேல் சந்திப்பு நீடித்த நிலையில் இது மரியாதை நிமித்தமானது என்றும் இதில் அரசியல் எதுவும் இல்லை என்றும் ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவின் பழமையான கிரிக்கெட் மைதானமான ஈடன் கார்டனுக்கு வருமாறு கங்குலி தன்னை அழைத்ததாகவும் அதை தான் ஏற்றுக்கொண்டதாகவும் ஆளுநர் ஜக்தீப் தன்கர் தன் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக சவுரவ் கங்குலி அரசியலில் குதிக்க உள்ளதாகவும் பாஜகவில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. மேற்கு வங்காளத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் கங்குலியை பாஜக தரப்பு முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் உலா வருகின்றன.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கங்குலி 2008 ஆம் ஆண்டுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வுப் பெற்றார். அதன் பின்பு 2012 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளிலிருந்தும் விலகிக்கொண்டார். இப்போது பிசிசிஐ தலைவராக சிறப்பாக செயலாற்றி வருகிறார் கங்குலி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com