\
அமித் ஷாவுக்கு தன் வீட்டில் விருந்தளித்த சவுரவ் கங்குலி - என்னென்ன உணவுகள் தெரியுமா?

அமித் ஷாவுக்கு தன் வீட்டில் விருந்தளித்த சவுரவ் கங்குலி - என்னென்ன உணவுகள் தெரியுமா?

அமித் ஷாவுக்கு தன் வீட்டில் விருந்தளித்த சவுரவ் கங்குலி - என்னென்ன உணவுகள் தெரியுமா?
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும். பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று இரவு விருந்து அளித்தார்.

சவுரவ் கங்குலியின் இல்லத்திற்குச் செல்வதற்கு முன், கொல்கத்தாவின் விக்டோரியா மெமோரியல் ஹாலில் கலாச்சார அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த 'முக்தி-மாத்ரிகா' எனும் கலாச்சார நிகழ்ச்சியில் அமித் ஷா கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் சவுரவ் கங்குலியின் மனைவி டோனா கங்குலி மற்றும் அவரது திக்ஷா மஞ்சரி குழுவினர் நடனம் ஆடினர்.



அமித் ஷா தனது வீட்டிற்குச் செல்வதற்கு முன்பு, அமித் ஷாவுக்கு சைவ உணவு வகைகளை தயார் செய்ததாக சவுரவ் கங்குலி கூறியிருந்தார். இதுபற்றி பேசிய கங்குலி, "எனக்கு அமித் ஷாவை 2008 முதல் தெரியும். நான் அவருடைய மகனுடன் வேலை செய்கிறேன். அவர் எங்கள் வீட்டிற்கு வரும்போது எங்களுடன் இரவு உணவு சாப்பிடுவார். அவர் வெஜ் மட்டுமே சாப்பிடுவார், எனவே சைவ உணவுகளையே தயார் செய்வோம்" என்று கூறினார்.

மேற்கு வங்கத்திற்கு இரண்டு நாள் பயணமாக வந்த அமித் ஷா, பாஜக தலைவர்கள் சுவேந்து அதிகாரி மற்றும் அமித் மால்வியா ஆகியோருடன் சவுரவ் கங்குலியின் வீட்டிற்கு வந்து இரவு உணவருந்தினார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு சாதம், ரொட்டி, லூச்சி, பேகன் பாஜா, ஷாஹி பன்னீர், தால் மக்கானி, தம் ஆலு, வெஜ் கட்லெட், காஜூ பர்ஃபி, மிஷ்டி தோய், ரஸகுல்லா ஆகிய உணவு வகைகள் கங்குலியின் வீட்டில் பரிமாறப்பட்டன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com