“விரைவில் சிப் பொருத்திய புதிய பாஸ்போர்ட்” - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

“விரைவில் சிப் பொருத்திய புதிய பாஸ்போர்ட்” - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

“விரைவில் சிப் பொருத்திய புதிய பாஸ்போர்ட்” - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
Published on

புதிய பாஸ்போர்ட்டில் விரைவில் சிப் பொருத்தப்பட்டிருக்கும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ‘பாஸ்போர்ட் சேவா திவஸ்’ என்னும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். அத்துடன் இந்த விழாவில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராக தனது முதல் உரையையும் அவர் ஆற்றினார். அதில், “பாஸ்போர்ட்டில் புதிய பாதுகாப்பு வசதியை கொண்டு வர இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் முயற்சிகள் மேற்கொண்டுவருகிறது. அதன்படி பாஸ்போர்ட்டில் பாதுகாப்பு வசதியான சிப் பொருத்தப்படுவது குறித்து முயற்சிகள் எடுத்துவருகிறோம். கூடிய விரைவில் இது நிறைவேறும். 

மேலும் வரும் காலத்தில் ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் தபால் நிலையங்களில் ஒரு பாஸ்போர்ட் சேவை மையம் இருக்கும். தற்போது ஆண்டிற்கு வெளியுறவுத் துறை அமைச்சகம் ஒரு கோடி பாஸ்போர்ட்களை கொடுத்துவருகிறது. இது தொடர்பாக ஏற்கெனவே அறிவித்துள்ள இடங்களில் விரைவில் பாஸ்போர்ட் சேவை தொடங்கும்” எனத் தெரிவித்தார்.  

நாட்டிலேயே சிறந்த பாஸ்போர்ட் சேவை மையமாக ஜலந்தர் பாஸ்போர்ட் மையம் விருது பெற்றது. இந்தப் பட்டியலில் கொச்சின் பாஸ்போர்ட் மையம் இரண்டாவது இடத்தையும், கோயும்புத்தூர் பாஸ்போர்ட் சேவை மையம் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன. அத்துடன் ஆந்திரா, தெலங்கானா மற்றும் கேரளா மாநிலங்களில் பாஸ்போர்ட்டிற்கான காவல்துறை சரிபார்ப்பு 19 நாட்களாக குறைக்கப்பட்டதற்கு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாராட்டுத் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com