\
விபத்தில் உயிரிழந்த உணவு டெலிவரி இளைஞரின் குடும்பத்தை நேரில் சந்தித்த சோனு சூட்!

விபத்தில் உயிரிழந்த உணவு டெலிவரி இளைஞரின் குடும்பத்தை நேரில் சந்தித்த சோனு சூட்!

விபத்தில் உயிரிழந்த உணவு டெலிவரி இளைஞரின் குடும்பத்தை நேரில் சந்தித்த சோனு சூட்!
Published on: 

உணவு டெலிவரி செய்யும் இளைஞர் விபத்தில் உயிரிழந்ததால், அவரது குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு உதவி செய்வதாகவும் நம்பிக்கை அளித்துள்ளார் நடிகர் சோனு சூட்.

இந்தியாவில் கடந்த மார்ச் 22 ஆம் தேதிமுதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி பேருதவி செய்தார் நடிகர் சோனு சூட். அதனைத்தொடர்ந்து அவரிடம் நேரிலும் ட்விட்டரிலும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. அவரும் உதவி செய்து ரியல் ஹீரோ என்பதை உணர்த்தி வருகிறார்.

இந்நிலையில், மும்பையில் உணவு டெலிவரி செய்யும் இளைஞர் டெலிவரிக்காக செல்லும்போது எதிரே வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து இளைஞர் மீது மோதியுள்ளது. இதில், அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைக் கேள்விப்பட்ட நடிகர் சோனு சூட் உயிரிழந்த இளைஞர் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு உதவி செய்வதாகவும் நம்பிக்கை அளித்துள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com