ஓராண்டுக்கு அமேசான் ப்ரைம் சந்தா உதவி கேட்ட நபர்; சோனு சூட்டின் கூல் ரிப்ளே!

ஓராண்டுக்கு அமேசான் ப்ரைம் சந்தா உதவி கேட்ட நபர்; சோனு சூட்டின் கூல் ரிப்ளே!

ஓராண்டுக்கு அமேசான் ப்ரைம் சந்தா உதவி கேட்ட நபர்; சோனு சூட்டின் கூல் ரிப்ளே!
Published on

ஓராண்டுக்கான அமேசான் ப்ரைம் சந்தா வழங்குமாறு ட்விட்டரில் உதவி கேட்டவருக்கு காமெடியாக பதிலளித்துள்ளார் நடிகர் சோனு சூட்.

கொரோனா ஊரடங்கால் ஆங்காங்கே சிக்கித் தவித்த புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊர் திரும்புவதற்கு பெரிய அளவில் உதவி செய்தவர் பாலிவுட் நடிகர் சோனு சூட். மேலும் சமூக வலைத்தளங்கள் மூலமாக உதவி தேடும் பலருக்கும் தேவையான உதவிகளை இயன்றவரை வழங்கி வருகிறார்.

உண்மையான உதவிக் குரல்களுக்கு மத்தியில் சில வேடிக்கையான உதவி கோருதல்களையும் சோனு சூட் அவ்வப்போது சந்தித்து வருகிறார். அப்படித்தான் ட்விட்டர் பயனர் ஒருவர் அமேசான் ப்ரைமுக்கு ஓராண்டு சந்தா வழங்குமாறும், தான் ‘வி’ திரைப்படத்தை காண ஆவலுடன் காத்திருப்பதாகவும் பதிவிட்டிருந்தார்.

அவரது ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்த சோனு சூட், ‘’வேண்டுமென்றால் நான் உங்களுக்கு ஒரு டிவி வாங்கி அனுப்பட்டுமா சகோ? அப்படியே ஒரு ஏர் கண்டிஷனர் மற்றும் கொஞ்சம் பாப்கார்ன்கள் அனுப்பி வைக்கட்டுமா?’’ என்று நையாண்டியாக ரிப்ளே செய்தார்.  

முன்னதாக தனது மாமியாரை சந்திப்பதற்கு கார் கேட்டவர்,  இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்க உதவி கேட்டவர், ப்யூட்டி பார்லர் செல்வதற்கு உதவுமாறு கேட்டவர்.. ஆகியோருக்கும் இதேபாணியில் பதிலளித்து அவர்களை வாயடைக்கச் செய்துள்ளார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com