''மருந்துகள் நாளை உங்களை வந்தடையும்'' - 12 வயது சிறுமிக்கு உதவிய சோனு சூட்!!

''மருந்துகள் நாளை உங்களை வந்தடையும்'' - 12 வயது சிறுமிக்கு உதவிய சோனு சூட்!!
''மருந்துகள் நாளை உங்களை வந்தடையும்'' - 12 வயது சிறுமிக்கு உதவிய சோனு சூட்!!

பாலிவுட் நடிகர் சோனு சூட் ஊரடங்கு ஆரம்பமான காலத்தில் இருந்தே, வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு உதவி செய்தல், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பத்திரமாக அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தல் உள்ளிட்ட சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்தார். ஒரு விவசாய குடும்பத்திற்கு டிராக்டர் வழங்கி ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். கோரக்பூரைச் சேர்ந்த 22 வயது பெண்மணியான தேவ வந்திதா என்பவரின் முழங்கால் அறுவைச் சிகிச்சைக்கு தேவையான 1.20 லட்சம் பணத்தை வழங்கி உதவி செய்தார்.

காய்கறி வியாபாரம் செய்த சாப்ட்வேர் இன்ஜினியருக்கு, வேலை வாங்கித் தந்தது என சமூக வலைதளங்களில் அவர் பார்வைக்கு வந்த பிரச்னைகளுக்கு தன்னால் ஆன உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் அரியவகை நோயினால் பாதிக்கப்பட்ட 12 வயது ஒடிசா சிறுமிக்கு டெல்லியில் இருந்து மருந்துகள் வேண்டும் என்று ட்விட்டரில் ஒருவர் வேண்டுகோள் விடுத்தார்.

அதற்கு பதிலளித்துள்ள சோனு சூட் மருந்துகள் நாளை உங்களை வந்தடையும். சிறுமிக்கு அன்பை தெரிவியுங்கள். வேறு ஏதேனும் உதவி செய்ய வேண்டுமா? என்றும் பதிவிட்டுள்ளார். ட்விட்டரில் பதிவிட்டு உதவி கேட்கும் பலருக்கு உடனுக்குடன் உதவி செய்யும் சோனு சூட்க்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com