ஊரடங்கால் வேலையிழப்பு; தாயின் இறுதிச் சடங்கிற்காக 3 நாட்கள் காத்திருந்த இளைஞர்கள்

ஊரடங்கால் வேலையிழப்பு; தாயின் இறுதிச் சடங்கிற்காக 3 நாட்கள் காத்திருந்த இளைஞர்கள்
ஊரடங்கால் வேலையிழப்பு; தாயின் இறுதிச் சடங்கிற்காக 3 நாட்கள் காத்திருந்த இளைஞர்கள்

கொரோனா ஊரடங்கு காரணமாக பலரும் வேலை இழந்து பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துவருகின்றனர். இந்நிலையில், கர்நாடகாவின் பேல்காவி மாவட்டத்தில் இறந்த தாயை தகனம் செய்வதற்குக்கூட பணம் இல்லாமல் 3 நாட்கள் காத்திருந்த துயர சம்பவம் நடந்துள்ளது.

அக்டோபர் 16-ஆம் தேதி பாரதி சந்திரகாந்த் பாஸ்ட்வாட்கர் என்ற பெண் பேல்காவி மாவட்ட மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். ஆனால் அந்த பெண்ணின் இரண்டு மகன்களுக்கும் ஊரடங்குக் காரணமாக வேலை இல்லாத காரணத்தால் அவர்களிடம் தாயின் இறுதிச் சடங்கிற்குக்கூட பணம் இல்லை. அதனால் சடலத்தை 3 நாட்களாக மருத்துவமனையிலேயே வைத்திருக்கின்றனர்.

இதையறிந்த நல்ல சமாரியன் என்ற தன்னார்வ தொண்டு அறக்கட்டளை அமைப்பு இறுதிச் சடங்கைச் செய்துமுடிக்க அவர்களுக்கு உதவியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com