'இட ஒதுக்கீடு சலுகையை வழங்க மறுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது' - சோனியா காந்தி கடிதம்

'இட ஒதுக்கீடு சலுகையை வழங்க மறுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது' - சோனியா காந்தி கடிதம்

'இட ஒதுக்கீடு சலுகையை வழங்க மறுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது' - சோனியா காந்தி கடிதம்
Published on

மாநில மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க கோரி பிரதமருக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய மற்றும் மாநில அரசின் மருத்துவ கல்வி நிறுவனங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டில் SC பிரிவினருக்கு 15 சதவிகிதமும் ST பிரிவினருக்கு 7.5 சதவிகிதமும், பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கு 10 சதவிகிதமும் வழங்கப்படுவதை, சோனியாகாந்தி தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு மத்திய அரசின் மருத்துவ கல்வி நிறுவனங்களில் மட்டுமே பின்பற்றப்படுகிறது, மாநில கல்லூரிகளில் இதனை நடைமுறைப்படுத்தாததால் கடந்த 2017ஆம் ஆண்டு இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் 11 ஆயிரம் பேருக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காமல் போனதாக சோனியா காந்தி கூறியுள்ளார்.

இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு சலுகையை வழங்க மறுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என கூறியுள்ள சோனியா காந்தி, மாநில மருத்துவ கல்வி நிறுவனங்களிலும் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க பிரதமர் மோடி முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com