மருத்துவரின் அறிவுரையை ஏற்று கோவா சென்றார் சோனியா காந்தி

மருத்துவரின் அறிவுரையை ஏற்று கோவா சென்றார் சோனியா காந்தி
மருத்துவரின் அறிவுரையை ஏற்று கோவா சென்றார் சோனியா காந்தி

உடல்நிலையைக் கருத்தில்கொண்டு டெல்லியிலிருந்து கோவா சென்றுள்ளார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு நீண்ட நாட்களாக ஆஸ்துமா மற்றும் நுரையீரல் தொற்று பாதிப்பு இருந்து வருகிறது. டெல்லியில் நிலவும் கடுமையான காற்று மாசுபாட்டால் சோனியா காந்தியை டெல்லியில் இருக்கவேண்டாம் என மருத்துவர்கள் அறியவுறுத்தி இருந்தனர். மேலும் வெப்பமயமான பகுதியில் சென்று சில நாட்கள் தங்கும்படி பரிந்துரை செய்திருந்தனர்.

அதனை ஏற்று, கோவா அல்லது சென்னைக்கு ராகுல் காந்தி அல்லது பிரியங்கா காந்தியுடன் வர வாய்ப்புள்ளதாக செய்தியாளர்கள் தெரிவித்திருந்த நிலையில், சோனியா காந்தி தற்போது கோவா சென்றுள்ளார். அங்கேயே சில நாட்கள் தங்கி ஓய்வெடுக்க உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com