கோவாவில் ஓய்வுவெடுக்கும் சோனியா காந்தி

கோவாவில் ஓய்வுவெடுக்கும் சோனியா காந்தி

கோவாவில் ஓய்வுவெடுக்கும் சோனியா காந்தி
Published on

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், ராகுல் காந்தியின் தாயுமான சோனியா காந்தி, கோவாவில் விடுமுறையை கழிக்கும் புகைப்படம்
வெளியாகியுள்ளது.

நேற்றைய தினம் ட்விட்டரில் வெளியான, சோனியா காந்தியின் புகைப்படம் சில நிமிடங்களுக்கு ட்விட்டர் வலைப்பக்கத்தில் ட்ரெண்ட் ஆனது. 71
வயதாகும் சோனியா காந்தி, கடந்த சில மாதங்களாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அண்மையில் அவர் டெல்லியில் உள்ள
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது. அதன் பின்பு, காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தியின்
மகனான ராகுல் காந்தி பதவியேற்றுக் கொண்டார்.

கட்சி பொறுப்பை ராகுலிடம் ஒப்படைத்த சோனியா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில், தற்போது ஓய்வில் இருக்கும் அவர்,
கோவாவில் அவருடைய விடுமுறையை கழித்து வருகிறார். கிறிஸ்துமஸ் தினத்திற்கு பிறகு கோவா சென்ற அவர், ஒய்வு நேரத்தை சிறப்பாக
செலவழித்து வருகிறார். இதை நிரூப்பிக்கும் வகையில், கோவாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சோனியா சைக்கிள் ஓட்டுகின்ற புகைப்படம்
ட்விட்டரில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தை கண்ட காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் சோனியா எப்போதும்
ஆரோக்கியமான உடல் நலத்துடன் வாழ வேண்டும் என்றும் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com