காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் சோனியா காந்தி குடும்பத்தினர் நடுநிலை - சசிதரூர் பேச்சு

காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் சோனியா காந்தி குடும்பத்தினர் நடுநிலை - சசிதரூர் பேச்சு
காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் சோனியா காந்தி குடும்பத்தினர் நடுநிலை - சசிதரூர் பேச்சு

காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் சோனியா காந்தி குடும்பத்தினர் நடுநிலை வகிப்பதாக சசிதரூர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிடும் சசிதரூர் மகாராஷ்ட்ராவில் தனக்கு ஆதரவு திரட்டும் பணியைத் தொடங்கினார். நாக்பூர் சென்றடைந்த அவர் செய்தியாளர்களைச் சந்தித்த போது, காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கேவிற்கு ஆதரவாக சோனியா குடும்பத்தினர் ஆதரிப்பதாகக் கூறப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. சோனியா குடும்பத்தினரிடம் தான் பேசியதாகவும், அவர்கள் தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும் என்றும், கட்சியின் செயல்பாடு பாரபட்சமின்றி இருக்க வேண்டும் என்று விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் சோனியா குடும்பத்தினர் கட்சியை பலப்படுத்தவே விரும்புகின்றனர் என்றும், கட்சி தலைவர் தேர்தலில் நடுநிலையாகவே இருக்கின்றனர் என்றும் சசி தரூர் கூறினார்.

தற்போதுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான போட்டியில் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசி தரூர் ஆகியோர் உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com