வோட்டு கேட்டு மக்களுக்கு கடிதம் எழுதிய சோனியா காந்தி...!
உத்தர பிரதேசத்தில் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தன் தொகுதியான ரே பரேலி-யில் உள்ள மக்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், தன்னுடைய தொகுதியான ரே பரேலி-யையும் தனது மகன் ராகுல் காந்தியின் தொகுதியான அமேதியையும் புறக்கணிப்பதற்காக மத்திய அரசையும் மோடியையும் அவர் சாடியுள்ளார்.
ரே பரேலி தொகுதியின் பிரதிநிதியாக இருப்பது தனக்கு பெருமையாக உள்ளதாகவும், அங்குள்ள மக்களுடன் தனக்கு சிறந்த பந்தம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
சில காரணங்களால் பிரச்சாரங்களில் பங்கேற்க முடியாமல் போனதாக கூறியுள்ள அவர், நடைபெற்று வரும் தேர்தலில் தொகுதி மக்களை காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறு வலியுறுத்தியுள்ளார். மோடியை கடுமையாக விமர்சித்துள்ள அவர், மத்திய அரசு சில தொழிலதிபர்களுக்காக மட்டுமே செயல்படுவதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.