\
பிரதமர் மோடிக்கு, சோனியா காந்தி கடிதம்

பிரதமர் மோடிக்கு, சோனியா காந்தி கடிதம்

பிரதமர் மோடிக்கு, சோனியா காந்தி கடிதம்
Published on

பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றுமாறு, பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

அந்தக் கடித்தத்தில், 'மக்களவையில் பாரதிய ஜனதாவுக்கு உள்ள பெரும்பான்மையை பயன்படுத்தி, மசோதாவை நிறைவேற்ற வேண்டும். இதற்கு காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் ஆதரவு தெரிவிப்பார்கள். 1989 மற்றும் 1993ஆம் ஆண்டுகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா கொண்டுவர முயற்சி மேற்கொண்டும், அது நிறைவேறாமல் போனது. கடந்த 2010ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் தேதி மாநிலங்களவையில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது. ஆனால் அந்த மசோதா இதுவரை மக்களவையில் நிறைவேற்றப் படவில்லை' என்று சோனியா தெரிவித்துள்ளார்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com