கட்சியில் ஒழுங்குக்கும் ஒற்றுமைக்கும் முக்கியத்துவம் தரப்பட வேண்டும் - சோனியா காந்தி

கட்சியில் ஒழுங்குக்கும் ஒற்றுமைக்கும் முக்கியத்துவம் தரப்பட வேண்டும் - சோனியா காந்தி
கட்சியில் ஒழுங்குக்கும் ஒற்றுமைக்கும் முக்கியத்துவம் தரப்பட வேண்டும் - சோனியா காந்தி

காங்கிரஸ் கட்சியில் ஒழுங்குக்கும் ஒற்றுமைக்கும் முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி அறிவுறுத்தியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், தனிப்பட்ட லட்சியங்களைவிட நிர்வாக கட்டமைப்பை வலுப்படுத்துவதே முக்கியம் என்றும் கூறினார்.

மேலும், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு தயாராவது தொடர்பாக கட்சியின் தேசிய பொதுச் செயலாளர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோருடன் தெலங்கானா பொறுப்பாளர் மாணிக்கம் தாகூர், ஒடிஷா பொறுப்பாளர் செல்லகுமார், மக்களவை உறுப்பினர் ஜோதிமணி ஆகியோரும் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் 5 மாநில தேர்தலுக்கு தயாராவது, புதிய உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. காங்கிரஸ் கட்சி தற்போது பஞ்சாப், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களில் ஆளும் கட்சியாக இருந்து வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com