லக்கிம்பூர் விவசாயிகள் கொலை விவகாரம் - மத்திய அமைச்சர் மகன் ஆஜர்.. போலீசார் விசாரணை

லக்கிம்பூர் விவசாயிகள் கொலை விவகாரம் - மத்திய அமைச்சர் மகன் ஆஜர்.. போலீசார் விசாரணை

லக்கிம்பூர் விவசாயிகள் கொலை விவகாரம் - மத்திய அமைச்சர் மகன் ஆஜர்.. போலீசார் விசாரணை
Published on

லக்கிம்பூரில் கார் ஏற்றி விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கில் மத்திய அமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ரா விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

உத்தரபிரதேசம் மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்யும் வீடியோ காட்சிகள் வைரலாக பரவியது. அந்த கார்  மத்திய அமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ராவின் கார் தான் என்றும் அவர்தான் கார் ஏற்றி கொன்றார் என்றும் விவசாயிகள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதனால், ஆசிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனிடையே ஆசிஷ் மிஸ்ராவிடம் விசாரணை நடத்த தாமதம் செய்ததற்கு நேற்று உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், லக்கிம்பூரில் உள்ள குற்றப்பிரிவு காவல்துறை அலுவலகத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். அவரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com