இறந்து போன அம்மாவின் சடலத்துடன் வசித்த மகன் கைது!

இறந்து போன அம்மாவின் சடலத்துடன் வசித்த மகன் கைது!

இறந்து போன அம்மாவின் சடலத்துடன் வசித்த மகன் கைது!
Published on

இறந்து போன அம்மாவின் சடலத்துடன் வசித்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

மத்திய கொல்கத்தாவின் பாவ்பஜாரில் சஷ்புஷன் தேய் தெருவில் வசித்து வருபவர் அபிஷேக் தாஸ். இவரது அம்மா, தபதி தாஸ். 70 வயதான இவர், கடந்த சில நாட்களுக்கு முன் இறந்தார். இதையடுத்து அவருக்கு இறுதிச் சடங்கு செய்யாமல் வீட்டுக்குள்ளேயே உடலை வைத்திருந்தார் அபிஷேக். சில நாட்கள் கழித்து வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வந்ததை அடுத்து, அக்கம் பக்கத்து வீட்டினர் வீட்டுக்குள் செல்ல முயன்றனர். ஆனால், அபிஷேக் யாரையும் வீட்டுக்குள் விடவில்லை. துர்நாற்றம் பற்றி கேட்டதற்கு அவர் சரியாகப் பதில் சொல்லவில்லை.

இதையடுத்து போலீசில் புகார் தெரிவித்தனர். அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு தபதி தாஸ் சடலமாக இருப்பதைக் கண்டனர். அவர் இறந்து சில நாட்கள் ஆகிவிட்டது என்பதால் உடலில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. பின்னர் அந்த உடலை போலீசார் கைப்பற்றி, இறுதிச்சடங்கு செய்ய ஏற்பாடு செய்தனர். 

அபிஷேக் தாஸ் கைது செய்யப்பட்டார். அவர் மனநிலை சரியில்லாதவர் போல நடந்து கொண்டதால் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com