\
crime
crimefile photo

‘நான் தான் கடவுள்..’ போதையில் தாயை தீ வைத்து எரித்துவிட்டு உளறிய மகன்!

பாட்னாவில் போதையில் 60 வயது தாயை தீ வைத்து மகனே எரித்துகொன்ற கொடூரம் நடந்துள்ளது.
Published on
Summary

பீகார் தலைநகர் பாட்னாவில் போதைக்கு அடிமையான மகன், தனது 60 வயது தாயை வீட்டிலேயே தீ வைத்து எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாட்னாவின் கஜேகலான் (Khajekalan) பகுதியில் நேற்று மாலை இந்த சம்பவம் நடந்துள்ளது. கைது செய்யப்பட்டவர் சிண்டு குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சிண்டு குமார் நீண்ட நாட்களாக போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்துள்ளார். நேற்று போதையில் வீட்டுக்கு வந்த அவர் தனது தாயுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை தாய் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே தாய் உயிரிழந்தார்.

CRIME
CRIME file photo

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கஜேகலான் காவல் நிலைய காவலர்கள், சிண்டுவை கைது செய்ய முயன்றபோது, அவர் காவல்துறையினரையும் தாக்கியுள்ளார். போதையின் உச்சத்தில் இருந்த அவர் தன்னை "கடவுள்" என்று கூறி பிதற்றியதாகவும், முன்னுக்குப் பின் முரணாக நடந்து கொண்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

பின்னர் போராடி அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். உயிரிழந்த மூதாட்டியின் உடல் பிரேத பரிசோதனைக்காக பாட்னா NMCH அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கொலை வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை , சிண்டு குமார் போதைப் பொருள் பயன்படுத்தினாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com