\
காஷ்மீரில் ராணுவ வீரர் மாயம் – தீவிரவாதிகளால் கடத்தப்பட்டிருக்கலாம் என அதிர்ச்சி தகவல்

காஷ்மீரில் ராணுவ வீரர் மாயம் – தீவிரவாதிகளால் கடத்தப்பட்டிருக்கலாம் என அதிர்ச்சி தகவல்

காஷ்மீரில் ராணுவ வீரர் மாயம் – தீவிரவாதிகளால் கடத்தப்பட்டிருக்கலாம் என அதிர்ச்சி தகவல்
Published on: 

பக்ரீத் பண்டிகை கொண்டாடுவதற்காக ஜம்மு-காஷ்மீர் சென்ற 162 வது பட்டாலியன் படைப்பிரிவை சேர்ந்த ரைபிள்மேன் ஷாகிர் மன்சூரை நேற்று மாலை 5 மணி முதல் காணவில்லை. அவரை தீவிரவாதிகள் கடத்தியிருக்கலாம் என்று ராணுவம் சந்தேகம் தெரிவித்துள்ளது.

ஷாகிர் மன்சூரின் கார் எரிந்த நிலையில் குல்கம் மாவட்டத்திலுள்ள ரம்பாமா பகுதியின் அருகே கண்டெடுக்கப்பட்டது. இதனால் பயங்கரவாதிகளால் அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்று ராணுவம் சந்தேகித்து தேடுதல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. டிரோன் கேமராக்கள், மோப்ப நாய்களை கொண்டு ராணுவம் தேடுதல் பணிகளை நடத்திவருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com