\
15 வயது மகளின் ஆபாச வீடியோ... எதிர்த்து போராடிய அப்பாவை அடித்தே கொன்ற கொடுமை!

15 வயது மகளின் ஆபாச வீடியோ... எதிர்த்து போராடிய அப்பாவை அடித்தே கொன்ற கொடுமை!

15 வயது மகளின் ஆபாச வீடியோ... எதிர்த்து போராடிய அப்பாவை அடித்தே கொன்ற கொடுமை!
Published on

குஜராத்தின் நடியாட் பகுதியை சேர்ந்த எல்லை பாதுகாப்பு வீரரொருவர், தன் மகள் தொடர்பாக பரவிய ஆபாச வீடியோவை எதிர்த்து, அதை வெளியிட்டவரின் குடும்பத்துக்கு எதிராக போராடிய நிலையில், அவர்களால் அடித்தே கொல்லப்பட்டிருக்கிரார். இதுதொடர்பாக தற்போது காவல்துறையினர் வழக்குப்பதிந்துள்ளனர்.

குறிப்பிட்ட அந்த எல்லை பாதுகாப்பு வீரருக்கு, 15 வயதில் பெண் குழந்தை இருக்கிறார். அந்த சிறுமியை ஆபாச வீடியோ எடுத்த பள்ளி மாணவனொருவன் (அவருக்கும் 15 வயது), அதை இணையத்தில் பதிவிட்டிருக்கிறார். இவ்விவகாரம் தொடர்பாக அம்மாணவனின் வீட்டுக்கு சென்ற எல்லை பாதுகாப்பு வீரர், மாணவனிடமும் மாணவனின் குடும்பத்தினருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அவருடன் அவரது மனைவி, இரு மகன்கள், சில உறவினர்களும் சென்றுள்ளனர் என தெரிகிறது. மோதல் முற்றிய நிலையில், எல்லை பாதுகாப்பு வீரர் போராட தொடங்கியிருக்கிறார்.

இதனால் மாணவனின் குடும்பத்தினர், எல்லை பாதுகாப்பு வீரரின் குடும்பத்தினரை மோசமாக பேசியதாக சொல்லப்படுகிறது.  அதை எதிர்த்து கேட்டபோது, பாதுகாப்பு வீரர் அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது. அவர் மட்டுமன்றி, அவரது மகனும் மிக மோசமாக தாக்கப்பட்டிருக்கிறார். தற்போது அவர் மருத்துவமனையில் இருக்கிறார்.

சம்பந்தப்பட்ட சிறுவனும் சிறுமியும் காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. அதையொட்டி இச்சம்பவங்கள் நடந்ததாக சொல்லப்படும் நிலையில், இரு குடும்பத்தினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அதில் ஒரு உயிர் பறிபோயிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து மாணவனின் குடும்பத்தினர் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளனர். அவர் மரணத்தை தொடர்ந்து, அவர் உடலுக்கு அவரது சக அதிகாரிகள் மரியாதை செலுத்தினர். மேற்கொண்டு எஃப்.ஐ.ஆர் பதியப்பட்டுள்ளது.

தொடர்ந்து விரிவான விசாரணையும், தப்பித்து ஓடிய மாணவனின் குடும்பத்தினரை பிடிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. தற்போது இவ்வழக்கில் ஏழு பேர் கைதாகியுள்ளனர் என நடியாட் டிஎஸ்பி பாஜ்பாய் தெரிவித்திருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com