காஷ்மீர் ராணுவக் குடியிருப்பில் தீவிரவாதிகள் தாக்குதல்

காஷ்மீர் ராணுவக் குடியிருப்பில் தீவிரவாதிகள் தாக்குதல்

காஷ்மீர் ராணுவக் குடியிருப்பில் தீவிரவாதிகள் தாக்குதல்
Published on

ஜம்மு- காஷ்மீரிலுள்ள ராணுவக் குடியிருப்பு முகாமிற்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சன்ஞ்வான் பகுதியில் ராணுவக் குடியிருப்பு முகாம் அமைந்துள்ளது. இன்று அதிகாலை இப்பகுதியில் ஊடுருவிய பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். எதிர்பாராத  இத்தாக்குதலில் 2 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்ததோடு மேலும் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். அதிகாலை 5 மணி அளவில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள் யாரும் எதிர்பாராத வேளையில் இந்தத் தாக்குதல் நடத்தினர். தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் நினைவுதினம்‌ நேற்று என்பதால், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பினர் ராணுவ அதி‌காரிகள் குடியிருப்பு முகாமில் தாக்குதல் நடத்தியுள்ளனர் எனத் தெரிகிறது. 

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ முகாமை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து அம்மாநில காவல்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்களைக் கேட்டறிந்தார். தொலைபேசி மூலம் ஜம்மு- காஷ்மீர் காவல்துறை தலைமை இயக்குநர் எஸ்.பி.வைத்திடம் பேசிய ராஜ்நாத், தாக்குதல் தொடர்பாக விவரங்களைக் கேட்டறிந்ததாக உள்துறை அமைச்சகத்தின் ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com