\
காஷ்மீரில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
Published on

ஜம்மு காஷ்மீரில் நடந்த என்கவுண்டரில் 6 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோஃபியான் மாவட்டத்தில் கப்ரான் படாகுண்ட் பகுதி அருகே பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அவர்களும் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இரு தரப்புக்கும் இடையே நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில்  பயங்கரவாதிகள் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படைவீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். கொல்லப்பட்ட தீவிரவாதிகளை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.  அவர்களிடம் இருந்த துப்பாக் கிகள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோஃபியான் மாவட்டம் முழுவதும் இணையதள சேவை முடக்க‌ப்பட்டுள்ளது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com