\
இந்தியாவிற்கான பாக். தூதராக சோஹைல் மஹ்மூத் பொறுப்பேற்பு

இந்தியாவிற்கான பாக். தூதராக சோஹைல் மஹ்மூத் பொறுப்பேற்பு

இந்தியாவிற்கான பாக். தூதராக சோஹைல் மஹ்மூத் பொறுப்பேற்பு
Published on

இந்தியாவிற்கான புதிய பாகிஸ்தான் தூதராக சோஹைல் மஹ்மூத் பதவியேற்றுக் கொண்டார்.

இந்தியாவிற்கான பாகிஸ்தான் நாட்டு தூதராக இருந்த அப்துல் பாஷித்தின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, இந்தியாவுக்கான புதிய தூதராக சோஹைல் மஹ்மூத் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இந்தியாவிற்கான தூதராக பதவியேற்றுக் கொண்டார். இவர், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை விரைவில் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை நடவடிக்கைகளில் நீண்ட அனுபவம் கொண்ட மஹ்மூத், துருக்கி, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கான பாகிஸ்தான் தூதராகவும் பணியாற்றியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com